உக்ரைனில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.  உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி முதல் நீடித்து வருகிறது. தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, உக்ரைன் முழுவதும் சமீப நாட்களாக அதிகரித்து வரும் ரஷ்ய தாக்குதல் காரணமாகவும், இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைனுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: