புனரமைப்பு பணியின்போது தீப்பிடித்து சரிந்த மசூதி: இந்தோனேசியாவில் பயங்கரம்

இந்தோனேசியா:  இந்தோனேசியாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் ஜாமி மசூதி உள்ளது. இதன் ராட்சத குவிமாடம் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல புனரமைப்பு பணி நடந்தபோது, திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் இடிந்து மசூதி விழுந்தது. இதனால் அப்பகுதி அடர்ந்த புகை மூட்டமாக காணப்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீவிபத்து குறித்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 4 தொழிலாளர்களிடம்  விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: