×

அமெரிக்காவில் தேர்தல் பெட்ரோல் விலையை குறைக்கிறார் பைடன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெட்ரோல் விலை குறைக்கப்படும்  என அதிபர் பைடன்  அதிரடியாக அறிவித்துள்ளார். எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (ஒபெக் நாடுகள்) அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை குறைக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. இதனால், சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும்.  இந்நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் நாட்டின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் இருந்து 1.5 கோடி பீப்பாய்கள் எண்ணெய்யை கூடுதலாக விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். பைடன் கூறுகையில், ‘‘இந்த  நடவடிக்கை, எரிபொருள் விலையை கட்டுக்குள் கொண்டுவர உதவும். சேமிப்பு கிடங்கில் இருந்து கூடுதலாக எண்ணெய் விடுவிப்பது பெட்ரோல் விலை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது,’’ என்றார். அடுத்த மாதம்  அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட் சபைக்கு தேர்தல் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டே, பெட்ரோல் விலையை பைடன் குறைப்பாக கூறப்படுகிறது.


Tags : Biden ,US election , Biden lowers gasoline prices in the US election
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை