×

குடும்பத்துடன் இத்தாலி சென்றபோது தொழிலதிபர் வீட்டில் 1.35 கிலோ தங்க நகைகள் திருட்டு: தெலங்கானா ஊழியர் அதிரடி கைது

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் இத்தாலிக்கு சென்று இருந்தபோது, வீட்டில் கள்ளச்சாவி மூலம் 1.35 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற தெலங்கானாவை சேர்ந்த ஊழியரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் பரசு தெருவை சேர்ந்த தொழிலதிபர் சாய் வெங்கட் (45). இவர், குடும்பத்துடன் இத்தாலிக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி சென்றுள்ளார். அப்போது தனது நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கரண் (35) மற்றும் நேபாளத்தை சேர்ந்த ராமு, சங்கர் ஆகியோரை வீட்டை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

தொழில் விஷயமாக இத்தாலி சென்ற சாய் வெங்கட் குடும்பம் கடந்த மே 3ம் தேதி வீட்டுக்கு திரும்பியது. அப்போது, (மே 7ம் தேதி) படுக்கை அறையில் இருந்த லாக்கரை திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த தங்க நாணயங்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் என ஒரு கிலோ 35 கிராம் மதிப்புள்ள தங்கம் மாயமாகி இருந்தது. இது குறித்து தொழிலதிபர் சாய் வெங்கட், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் வீட்டின் சாவி மற்றும் லாக்கர் சாவிகளை அவர் இருக்கும் போதே போலியாக தெலங்கானாவை சேர்ந்த கரண் தயாரித்துள்ளார். பிறகு தொழிலதிபர் வெளிநாடு சென்ற பிறகு இரவு நேரத்தில் வீட்டை திறந்தும், லாக்கரில் உள்ள நகைகளை கொள்ளையடித்தும் சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து கரணை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தெலங்கானா போலீசார் உதவியுடன் கம்மம் பகுதியில் கைது செய்தனர்.


Tags : Italy ,Telangana , 1.35 kg gold jewelery stolen from businessman's house, Telangana employee arrested
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்