ஜி.கே.வாசன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் தடையை மீறி நேற்று முன்தினம் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைத்தனர். அவரை சந்திக்க சென்ற ஜி.கே.வாசனை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசாரின் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,ராஜம் எம்பி நாதன், முனவர் பாட்சா, சென்னை நந்து,வில்சன் என 6 பேர் மீது எழும்பூர் போலீசார் ஐபிசி 143 மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: