×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் வன்மத்திற்கு பின்னணி என்ன என்பதை ஆராய்க: முதல்வருக்கு பழ. நெடுமாறன் கோரிக்கை

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் வன்மத்திற்கு பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வு தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டறியாத மிகக் கொடுமையான நிகழ்வாகும். போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் பலர் குறிபார்த்துச் சுடப்பட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கும், துப்பாக்கிச்சூட்டுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதை ஆராய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றும், நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Thoothukudi gunfire ,Nadumaran , Thoothukudi firing, Vanmam, Principal, Fruit. Nedumaran
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...