×

தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் முகாமிட்டு சுற்றித்திரியும் யானைகள்: வனத்துறையினர் எச்சரிக்கை

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிவதால், வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் காப்பு காட்டில், 7 காட்டு யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி, அருகிலுள்ள கிராம பகுதிகளில் தினமும் சுற்றிவருகின்றன.

இந்நிலையில், நொகனூர் காப்பு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள், நேற்று பகல் நேரத்தில், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ரங்கசந்திரம் என்ற கிராமத்தில் சுற்றி திரிந்தன. விளை நிலங்கள் வழியாக சென்ற இந்த யானைகளை பார்த்த பொதுமக்கள், உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், பட்டாசுகள் வெடித்து யானைகளை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்கு விரட்டினர்.

யானைகள் கிராம பகுதிகளுக்குள் முகாமிட்டு சுற்றித் திரிவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பகல் நேரங்களில் விளைநிலங்களில் வேலை செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என, ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Honeykotta , Dhenkanikottai, elephants roaming around in villages, forest department alert
× RELATED தேன்கனிக்கோட்டை அருகே 3 பேரை கொன்ற...