×

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், யோகாசனத்தில் 3 உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு-வினோதினி தம்பதி. இவர்களின் மகள் பி.ஹேமஸ்ரீ (7). இவர், அதே கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக ஹேமஸ்ரீ தீவிர யோகாசன பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற யோகாசன போட்டியில் பூர்ண கபோடாசனம் எனும் ஆசனத்தில் ஹேமஸ்ரீ நின்றபடி, 78 முறை கழுத்துடன் இரு கால்களை இணைத்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் வேர்ல்டு வைட் புக் ஆப் ரெக்கார்ட், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் உலக சாதனை ஆகிய 3 கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஹேமஸ்ரீயின் சாதனை இடம்பிடித்தன. யோகாசனத்தில் சாதனை படைத்த மாணவி ஹேமஸ்ரீ, யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை நாகராஜகண்டிகை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags : Kummidipoondi , Government school girl near Kummidipoondi world record in yoga
× RELATED ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி...