'ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜெ. மரணத்தில் நீதி கிடைத்தது': ஜெயலலிதாவுக்கு சசிகலா நம்பிக்கை துரோகம் செய்ததாக ஜெ.தீபா பேட்டி..!!

சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததால் ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைத்திருப்பதாக அவருடைய சகோதரர் மகள் ஜெ.தீபா தெரிவித்திருக்கிறார். சன் நியூஸுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்பு பேட்டியில், போயஸ் கார்டனில் பணி பெண்ணாக அனுமதிக்கப்பட்ட சசிகலா, தானே ஜெயலலிதா வாரிசு என கூறி, அரசியல் பிரவேசம் செய்ததை குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகசாமி அறிக்கை மூலமாக உண்மை வெளிவந்திருப்பதாக தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு சசிகலா நம்பிக்கை துரோகம் செய்தது அறிக்கை மூலமாக அம்பலமாகி இருப்பதாக அவர் சாடியுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்தபோது ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக தீபா தெரிவித்துள்ளார்.

அப்போது அவருடைய உடல்நிலை நல்லவிதமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு ஜெயலலிதாவை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு தினமும் அங்கு சென்று ஜெயலலிதாவை பார்க்க முயற்சி எடுத்ததாகவும் தீபா தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலா உத்தரவின்பேரில் போலீசார் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறிய அவர், சிறப்பு விசாரணை குழு அமைத்து சசிகலா மற்றும் அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தினரை விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: