தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை குறைக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் ஒரு வருடத்தில் 4 முறை விலையை ஏற்றியுள்ளனர், உடனடியாக பால் விலையை குறைக்க வேண்டும் எனவும் மது விற்பனைக்கு இலக்கு வைப்பதற்கு பதில், கல்விக்கு தமிழ்நாடு அரசு இலக்கு வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: