×

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்: யுஜிசி உத்தரவு

சென்னை: இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை யுஜிசியின் முதன்மைப் பணிகள் ஆகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது.

மேலும், உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியையும் யுஜிசி செய்து வருகிறது. இந்த நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கை அளித்துள்ளது.

இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளது மேலும், இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

Tags : UGC , Colleges, universities to start cyber security courses at undergraduate and postgraduate levels: UGC orders
× RELATED சைபர் க்ரைம் தொடர்பான இணையவழி...