×

பெங்களூருவில் 3 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

கர்நாடக : பெங்களூருவில் ஒரு நாள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெங்களூரு நகரம் தத்தளித்து வருகிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூருவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடப்படுள்ளது. ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் செயல்படும் அந்நகரில் மகாதேவ்பூர், சிவாஜி நகர் போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. தீடிரென வெள்ளம் பெருக்கெடுத்தால் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.  

சிவாஜி நகர், விஜய நகர், ஹம்பி நகர், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ராஜராஜேஸ்வரி நகர், மைசூர் சாலை, ஜெய நகர், வித்யாரண்ய புரம், மல்லேஸ்வரம் உட்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிவானந்த சதுக்கம், மெஜஸ்டிக் சுற்று பகுதி ஆகிய சுரங்க பாறைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கனமழையால் அடுக்குமாடி கட்டிடங்களில் வெள்ளம் புகுந்து கார் பார்க்கிங் தண்ணீரால் நிரப்பியது. பெங்களூருவில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வெள்ளத்திற்கு மத்தியில் டிராக்டர் மூலம் அலுவலகம் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கனமழையால் தின கூலிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோரமங்களா என்ற இடத்தில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள் வெள்ளத்தில் சிக்கி வாகனங்களை நடுவழியில் நிறுத்தி விட்டு ஆட்டோ மூலம் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கனமழையால் மெஜஸ்டிக் பகுதியில் சுவர் இடிந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் சேதமடைந்தனர்.      


Tags : Bengaluru , In Bengaluru, heavy rain, yellow, warning, two-wheeler, vehicles, water, rush
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...