×

2022ம் ஆண்டு கோடையில் வேகமாக உருகிய ஆல்ப்ஸ் பனிப்பாறை

லண்டன்: கால நிலை மாற்ற பாதிப்புக்கள் கடந்த சில சகாப்தங்களாக உலகம் முழுவதும் அதிக அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களால் பேரிடர்கள் நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது தற்போது தீவிரமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் பனிப்பாறைகள் கால நிலை மாற்றத்தின் காரணமாக உருகி மறைந்து வருவது அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மோசமான கோடைக்கு பின் அங்கு தற்போது பனிப்பொழிய தொடங்கி உள்ளது. இந்த ஆண்டில் வெப்ப அலைகள் காரணமாக குறைந்தபட்சம் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பிரான்சில் மட்டும் 14ஆயிரம் பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Alps , The fastest melting Alps glacier in the summer of 2022
× RELATED 2022ம் ஆண்டு கோடையில் வேகமாக உருகிய ஆல்ப்ஸ் பனிப்பாறை