பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் 120  நாட்களுக்கு தண்ணீர்  திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்  வட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 20.10.2022 முதல் 16.02.2023 முடிய  120  நாட்களுக்கு, 9849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல்  இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர்  திறந்துவிட  அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி ஆகிய வட்டங்களிலுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: