உலக கோப்பை டி.20 கிரிக்கெட்; கட்டாய வெற்றி நெருக்கடியில் நாளை நெதர்லாந்துடன் இலங்கை மோதல்: ஏ பிரிவில் சூப்பர் 12 சுற்று வாய்ப்பு யார், யாருக்கு?

சிட்னி: 8வது ஐசிசி டி.20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ள. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற 8 அணிகள் தகுதிசுற்றில் இரு பிரிவுகளாக விளையாடி வருகின்றன. இதில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றில் இணையும்.

நாளை மறுநாளுடன் தகுதி சுற்று போட்டிகள் முடிகின்றன. வரும் 22ம் தேதி சூப்பர் 12 சுற்றுதொடங்குகிறது. இதனிடையே தகுதி சுற்றில், நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் ஏ பிரிவில் நமீபியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து இதே பிரிவில் மற்றொரு போட்டியில் இலங்கை 79 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. ஏ பிரிவில் நெதர்லாந்து முதல் போட்டியில் யுஏஇ, 2வது போட்டியில் நமீபியாவை வீழத்தி 4புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உளளது.

முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அசத்திய நமீபியா நேற்று நெதர்லாந்திடம் வீழ்ந்தது. இலங்கை அணி நமீபியாவிடம் தோல்வி கண்ட நிலையில் நேற்று யுஏஇ அணியை வீழ்த்தியது. இந்த இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த யுஏஇ சூப்பர் 12 சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. நாளை இலங்கை தகுதி சுற்றில் தனது கடைசி போட்டியில் நெதர்லாந்துடன் மோதுகிறது.

இதில் இலங்கை வெற்றி பெற்றால் தான் சூப்பர் 12 சுற்று வாய்ப்பு கிடைக்கும். தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டியது தான். நமீபியா ஏ பிரிவில் நல்ல ரன்ரேட்டில் உள்ள நிலையில் நாளை  யுஏஇ அணியுடன் மோதுகிறது. இதில் நமீபியா வென்றால் 4 புள்ளிகளுடன் எளிதாக சூப்பர் 12 சுற்று வாய்ப்பு உறுதியாகிவிடும். தோல்வி அடைந்தால் நெதர்லாந்துக்கு வாய்ப்பு கிடைக்கும். இலங்கை தோற்றால் நெதர்லாந்துடன் நமீபியாவும் தகுதி பெற்றுவிடும்.

Related Stories: