வெற்றியை தொடருமா தமிழ்தலைவாஸ்?.. பெங்களூரு புல்சுடன் இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 26வது லீக் போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 39-24 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. கடைசி வரை த்ரிலாக நடந்த இந்த ஆட்டத்தில் 26-25 என்ற புள்ளி கணக்கில், புனேரி பால்டன் வெற்றி பெற்றது. அந்த அணியின் மோஹித் கோயாட் 10 புள்ளிகள் எடுத்தார்.

இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத்-உ.பி.யோத்தா, இரவு 8.30 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-தமிழ்தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. கடைசிபோட்டியில் தமிழ்தலைவாஸ் பாட்னாவை வீழ்த்திய நிலையில் இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது.

Related Stories: