×

கூட்டுறவு, உணவு , நுகர்வோர் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத் தொகை அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட உத்தரவில்  கூறியிருப்பதாவது: லாபத்தை மட்டும் கணக்கீடு செய்யாமல்,   போனஸ் வழங்கும் சட்டம்(1965) அடிப்படையில் போனஸ் 8.33சதவீதமும், கருணைத் தொகை 1.67 சதவீதமும் என மொத்தத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் வழங்க வேண்டும்.

இந்த போனஸ் தொகையானது குரூப் சி, டி ஊழியர்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ள போனஸ் திருத்தச் சட்டம்(2015)ன் படி  2022-23 போனஸ் பெறுபவர்களின் தளர்த்தப்பட்ட ஊதிய உச்ச வரம்பு ரூ.21,000 இருக்க வேண்டும். இவர்கள் 2021-22ம் ஆண்டில் பணி புரிந்ததின் அடிப்படையில் இந்த ஆண்டு போனஸ் வழங்கப்படும்.
மேலும் சார்பு, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள்,  ஆரம்ப நிலை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் வழங்கும் சட்டத்தின் படி போனஸ் மற்றும் கருணைத் தொகை பெறுவார்கள்.

அதே நேரத்தில் இந்த அமைப்புகளில் பணியாற்றும் துணை நிலை ஊழியர்கள் போனஸ் வழங்கும் சட்டத்தின் கீழ் போனஸ் பெற வாய்ப்பு இல்லாவிட்டாலும் கருணைத் தொகையாக ரூ.2,400 முதல் ரூ.3000 வரை கருணைத் தொகை பெறலாம். இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் அனுப்பியிருந்த வேண்டுதல் கடிதங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Diwali Bonus, Gratuity Notification for Cooperative, Food, Consumer Protection Department Employees
× RELATED டெல்லி முதல்வரை பதவியில் இருந்து...