திருப்பூரில் காப்பக சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட்

திருப்பூர்: திருப்பூரில் காப்பக சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பூரில் உள்ள திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாள்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2 சிறுவர்கள் காப்பகத்திலேயே உயிரிழந்துள்ளனர்; ஒருவர் வழியில் பலியானார். இந்த சம்பம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து சமூக நல பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனியார் காப்பகத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: