×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து 37,600க்கு விற்பனை

சென்னை: தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் அதிரடியாக சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Tags : Chennai ,Sawaran , In Chennai, jewelery prices fell by Rs 40 to Rs 37,600
× RELATED வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய...