ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் காலி பணியிடம் குறித்து விவரம் கோரி கடிதம்

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணக்கர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 10-ம் வகுப்பு வரை எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட பாட வாரியான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் பாட வாரியான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

18.10.2022 அன்றைய நிலையிலான பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள் தங்களது G-Mail முகவரிக்கு Google Form தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபாடு இல்லமல் முழுமையாக பூர்த்தி செய்து 20.10.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் அவசரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: