×

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது: எம்எல்ஏ கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். நேற்று முன்தினம் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

ஏரிகளுக்கு வேலி அமைப்பது இப்போது முடியாத காரியம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பிச்சாண்டி எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் நிலையில் ஏரிகளுக்கு வேலி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி, அரசு விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தூர்வாரப்படும் என்றும் தற்போது தண்ணீர் அதிகம் இருப்பதால் வீராணம் ஏரியை தூர்வார முடியாத நிலை உள்ளது. தண்ணீரின் அளவு குறைந்ததும் உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று வீராணம் ஏரி தூர்வாரப்படும். விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.  

காவிரி செல்லும் இடங்களில் எல்லாம் விரைவில் நீர் சேமிப்பு திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


Tags : Tamil Nadu Legislation ,Minister ,Thuraymurugan ,MLA , 3rd Day of Tamil Nadu Legislative Assembly Begins, Minister Duraimurugan, Answers, MLA Questions
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...