சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது

சென்னை : அனுமதி மறுக்கப்பட்டபோதும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவினர் அந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் தனியார் இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நேற்று, சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை  விவகாரம் தொடர்பாக எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்தது பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க 2 நாட்கள் தடை விதித்து சபாநாயர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவை முன்னவர் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு நாள் மட்டும் தடைவிதிக்கப்பட்டது.

இதனை அடுத்து சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கோரியிருந்தனர். காவல்த்துறை சார்பில்  அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் அந்த இடத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

Related Stories: