×

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லை பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.  

இதில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை தடுப்பு குறித்த பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லூரியில் இருந்து கேம்ப் ரோடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனர்.

Tags : Anti-Drug Awareness Rally , Anti-Drug Awareness Rally
× RELATED மாமல்லபுரத்தில் மாணவர் காவல் படை...