கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துக்கு 14 அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துக்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனத்திற்கு வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு கைம்பெண்கள் (ம)ஆதரவற்ற மகளிர் நல வாரியம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக ”கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாரியத்திற்கு 14 அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது. கைம்பெண்கள் பிரதிநிதிகள்-4 நபர்கள்(பட்டியலினத்தவர்-1, பழங்குடியினர்-1, இதர வகுப்பினர்-2) கல்வியாளர்கள்-2 நபர்கள், பெண் தொழில் முனைவோர்கள்-2 நபர்கள், பெண் விருதாளர்கள்-2 நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள்-4 நபர்கள்.

இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களைத் மாநில அரசு தேர்வு செய்து நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதி மற்றும் அனுபவமுள்ள நபர்கள் வருகிற 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம், கலச மஹால் முதல் தளம், எழிலகம் பின்புறம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இது குறித்த விவரங்கள் www.tn.gov.in/(Social Welfare and Women Empowerment Department) என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: