எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்: எடப்பாடி பேட்டி

சென்னை: எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் தங்களின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு நிராகரித்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயக்குமாரையும், துணை செயலாளராக அக்ரி கிருஷ்ண மூர்த்தியையும் நியமனம் செய்யவேண்டும் என்று  62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அளித்தோம். மீண்டும் 2முறை நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே துணைத்தலைவராக (ஓ.பன்னீர்செல்வம்) இருந்தவரையே தொடரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு துணைத்தலைவர் இருக்கையிலே அமர வைத்துள்ளார்கள்.எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எங்களுடைய கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார்.

Related Stories: