துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.1.22 கோடி தங்கம் பறிமுதல்: புதுக்கோட்டை பயணி கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.22 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பயணியின் பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்துவைத்திருந்த 25 சவரன் தங்க செயின்கள் மற்றும் தங்க பசையையும் பறிமுதல் செய்தல் செய்தனர். அதன் மொத்த எடை 507 கிராம்.

இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைப் பகுதியில் உள்ள கழிவறைகளை ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அப்போது 2 கழிவறைகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் மறைத்து வைத்திருந்த 3 பார்சல்களை ஊழியர்கள் எடுத்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். அவற்றை திறந்து பார்த்தபோது, 2.29 கிலோ தங்கபசை இருந்தது. அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ.1.22 கோடி மதிப்புடைய 2.8 கிலோ தங்க செயின்கள் மற்றும் தங்க பசைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்க சோதனையில் பிடிபட்டுவிடுவோம் என பயந்து விமான நிலைய கழிவறையில் தங்கப் பசையை மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான கடத்தல்காரர்களை சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சுங்க அதிகாரிகள் தேடுகின்றனர்.

Related Stories: