×

ஆதீன மடங்கள் தவறு செய்யும் போது உரிய நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு; ஐகோர்ட் கிளை கருத்து..!

மதுரை: ஆதீன மடங்கள் தவறு செய்யும் போது உரிய நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் உண்டு என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை ஆதீன மடம் என்பது மிகவும் தொன்மையான மடம். இந்த மடத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலங்கள், சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பங்களும் பகுதியில் சுமார் 1200ஏக்கர் நிலங்கள் இந்த மடத்திற்கு சொந்தமாக உள்ளது.

இந்த மடத்தை மறைந்த மதுரை முன்னாள் ஆதீனம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கடந்த 2008ல் அதிகாரத்தை ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் 2018ம் ஆண்டில் சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 99 வருட ஒத்தகைக்காக இந்த பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இது சட்டவிரோதம், குறிப்பாக மடங்களை பொறுத்தவரை 5 வருடங்களுக்கு மேல் யாருக்கும் ஒத்தகைக்கு கொடுக்க கூடாது என்று இந்து அறநிலையத்துறை சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே சட்ட விதிகளை மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

எனவே இந்த பத்திரத்தை ரத்து செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீன மடங்கள் பத்திரங்களை பார்த்ததும் நீதிபதிகள் ஆச்சரியமடைந்த இது எப்படி ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனி நபர் ஒருவருக்கு ஒத்தகைக்கு விட முடியும்? இவ்வாறு சட்டத்தில் வழிவகை உண்டா? என்று கேள்வி எழுப்பினார். ஆதீன மடங்கள் என்பது மடங்களாக செயல்படுகிறதா? இல்லை வியாபார நிறுவனங்களாக செயல்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் ஆதீன மடங்கள் தவறு செய்யும் போது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. ஏன் நீங்கள் மவுனமாக இருக்கிறீர்கள். ஏன் நவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வியும் எழுப்பினார். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அமைத்து 1200 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது தொடர்பாக தற்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அந்த நிலத்தின் உரிமையாளர்  யார்? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Tags : Hinduism Department ,Addina ,ICORT , The Department of Hindu Charities has the power to take appropriate action when Adeena Mutts commit wrongdoing; iCourt branch opinion..!
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...