கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் உ விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் திருமதி.கலா ரமேஷ், திரு.பிரேம்குமார் வாஞ்சிநாதன், திருமதி.சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டுவருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: