×

பும்ரா இடத்தை நிரப்ப சரியான ஆள் ஷமிதான்: சச்சின் கணிப்பு

மும்பை: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக ஷமியே சரியான தேர்வாகும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார். காயம் காரணமாக டி 20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகினார். டெத் ஓவர்களில் பும்ராவின் இடத்தை யார் நிரப்புவது என்று இந்திய அணி நிர்வாகம் வியர்த்துவந்த நிலையில் முகமது ஷமியை களமிறக்க முடிவு செய்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:-டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இந்திய அணியில் ஆழமும் சமநிலையும் உள்ளது.

டெத் ஓவர்களில் பந்துவீசுவதில்தான் இந்திய அணியின் செயல்திறனுக்கு முக்கியம் ஆகும். அணியில் பும்ரா இல்லாததால் ஏற்பட்ட பெரிய ஓட்டையை நிச்சயமாக முகமது ஷமியால் நிரப்ப முடியும். ஷமி நல்லவர், வல்லவர். பும்ராவிற்கு சரியான மாற்று அவர்தான். ஷமியை பொறுத்தமட்டில் அவர் ஒரு நல்ல ஸ்ட்ரைக் பவுலர். நீண்ட நாட்களாகவே இருக்கிறார். பெரிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. அவரது பந்துவீச்சைப் பார்த்து ரசித்தவர்களின் நானும் ஒருவன். அவர்தான் பும்ராவின் இடத்தை நிரப்ப சரியான ஆள்.

இருப்பினும் நான் இந்திய அணியில் ஆடும் 11 வீரர்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கடந்த 11 மாதங்களாக இந்தியாவுக்காக ஷமி டி 20 போட்டிகளில் விளையாடவில்லை, ஆனால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை ஷமி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Shami ,Bumrah ,Sachin , Shami is the right man to fill Bumrah's place: Sachin's prediction
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!