பாகிஸ்தானை வென்றால் இந்திய அணியால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியும்: சுரேஷ் ரெய்னா

மும்பை: எதிர்வரும் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் இந்தியா வென்றால், உலகக் கோப்பையையும் வெல்லும் என தான் நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் 2011-ல் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் விளையாடியவர் சுரேஷ் ரெய்னா, மிஸ்ட்டர் ஐபிஎல் என பேர்கொண்டவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர். நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்றால் உலகக் கோப்பையை வெல்லும் என நான் நினைக்கிறேன்.

ரோகித் சர்மா சிறப்பான தலைவராக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களும் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

Related Stories: