ஆலந்தூரில் பரபரப்பு: மாடி படிக்கட்டு இடிந்து விழுந்தது: அறையில் சிக்கிய 2 பேர் மீட்பு

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் மார்கோஸ் தெருவில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இது பழமையான வீடு என்று தெரிகிறது. இன்று காலை அந்த வீட்டின் மாடி படிக்கட்டு திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பிறகு அப்பகுதி மக்கள் சிலர் சென்று பார்த்தபோது படிக்கட்டு உடைந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. மேலும் அங்குள்ள மின் கம்பியும் அறுந்துவிழுந்து படிக்கட்டு கீழே தொங்கியது. இதன்காரணமாக மாடி வீட்டில் வசித்துவரும் 2 பேர் சிக்கிக்கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். இதனிடையே தகவல் கிடைத்ததும் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வார்டு கவுன்சிலர் பிருந்தா, முரளி கிருஷ்ணன், திமுக பகுதி செயலாளர் பி.குணாளன் ஆகியோர் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மாடியில் சிக்கியவர்களை ஜேசிபி எந்திரத்தின் மூலம் மீட்டு பத்திரமாக கீழே இறக்கினர்.

Related Stories: