×

பீல்டிங்கில் அசத்திய கோஹ்லி

பிரிஸ்பேன்:  பிரிஸ்பேனில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது. கடைசி ஓவரில் ஷமி 3 விக்கெட் எடுத்து அசத்தினார். அதே நேரத்தில் விராட்கோஹ்லியின் பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இந்த போட்டியில் விராட் கோஹ்லி அருமையாக பீல்டிங் செய்து டிரெண்ட் ஆனார். ஹர்ஷல் படேல் வீசிய பந்தை தொட்டுவிட்டு ரன் எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்  டிம் டேவிட்டை விராட் கோஹ்லி ரன் ஆவுட் செய்த விதம் ரசிகர்களை பூரிப்படைய வைத்தது. பந்தை எடுத்து பாய்ந்தபடியே ஸ்டெம்பை நோக்கி வீசி ரன் அவுட் செய்தார்.

தொடர்ந்து கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷமி வீசிய 3வது பந்தை தூக்கி அடித்த பேட் கம்மின்ஸ் கேட்சை, கோஹ்லி ஒரே கையில் பவுண்டரி லைனில் இருந்து அசால்டாக பிடித்து அசத்தினார். கோஹ்லி செய்த ரன் அவுட் மற்றும் கேட்ச் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கோஹ்லி பீல்டிங் செய்ததற்கு பின்னால் தான் வார்னர், பிஞ்ச், ஸ்டாய்னிஸ் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் கோஹ்லியின் கேட்ச்சை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.


Tags : Kohli , Kohli is amazing in fielding
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்