×

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்களை வெளியேற்றியதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ-க்களை வெளியேற்றியதை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சபை காவலர்கள் மூலம் கலகம் செய்யும் எடப்பாடி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு சபாநாயக்கர் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சட்டப்பேரவை  நிகழ்வுகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்எல்ஏ-க்கள் பங்கேற்க இன்று தடை விதிக்கப்பட்டது இதனையடுத்து நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நாளை 19.10.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான N. தளவாய்சுந்தரம், கழக அமைப்புச் செயலாளரும், தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர்.

கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று கூறியுள்ளனர்.


Tags : Addapadi Andavasamy ,Addapadi Ancilia , AIADMK members to go on fast tomorrow to protest expulsion of AIADMK MLAs from assembly: Edappadi Palanichamy announces
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....