×

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக ரோஜர் பின்னி நியமனம்: வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. தலைவராக இருந்து வரும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. அத்துடன் கங்குலி பெங்கால் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்து விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான 67 வயது ரோஜர் பின்னி இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக ஜெய் ஷா மீண்டும் தேர்வாகிறார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதியாக யார்? போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்தியா தரப்பில் இருந்து யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Board of Control for Cricket in India ,BCCI ,Roger Binny , Board of Control for Cricket in India (BCCI) appoints Roger Binny as president: Decision at annual general body meeting
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்