×

தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வரும் 100% பசுமை பட்டாசுகள்: அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: பொதுமக்களையும், சுற்றுசூழலையும் பாதிக்காதவானம் 100% பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துருப்பதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு சுற்றுலா துறை சர்ப்பில் சென்னை தீவுத்தொடரில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 144 உரிமையாளர்கள் இனைந்து 47 பட்டாசு கடைகளை அமைத்துள்ளார்.

இவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுற்றுசூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவகையில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டுருப்பதை வியாபாரிகளும், பொதுமக்களும் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

சீனா பட்டாசுகளால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும், ஆனால் தற்பொழுது பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துருப்பதால் சுற்றுசூழலுக்கு பெரிதும் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், போனின் செல்வன் படத்தில் வரும் இடங்களை சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


Tags : Diwali ,Minister ,Madivendan , 100% green crackers to be sold for Diwali: Minister Madivendan
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...