இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிறுவன் கைது

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியை சேர்ந்த சாந்தி (43, பெயர் மாற்றப்பட்டுள்ளது), சூளைமேடு காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது  15 வயது மகளை காணவில்லை, என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை, 17 வயது சிறுவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சூளைமேடு மார்க்கெட் அருகே, இருவரும் சுற்றித்திரிவது தெரிய வந்தது. நேற்று அதிகாலை அந்த பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், இருவரையும் மீட்டு சூளைமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர்.

அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம், கடந்த 3 மாதமாக சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து,  சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், சிறுமியை கடத்தியது மற்றும்  போக்சோ ஆகிய வழக்குகளில் சிறுவனை கைது செய்து, கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அந்த சிறுமியை அதே பள்ளியில் உள்ள பெண்கள் பிரிவில் சேர்த்தனர்.

Related Stories: