×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் தின விழா

தண்டையார்பேட்டை: உலக மயக்கவியல் தின விழாவை முன்னிட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்விசார் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகில் முதன் முறையாக ஈத்தர் திரவியம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை நினைவூட்டும் விதபாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக மயக்கவியல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மயக்கவியல் துறையின் கூட்டமைப்பு ‘‘மருந்து பாதுகாப்பு” என்பதை ஆய்வுப் பொருளாக அறிவித்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுமார் 300 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கல்விசார் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மருத்துவமனை டீன் பாலாஜி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடாசலம் கலந்துகொண்டு மருந்து பாதுகாப்பு குறித்தும், அதன் செய்முறை குறித்தும், அதில் மயக்கவியல் நிபுணரின் முக்கிய பங்கு குறித்தும் விரிவாக பேசினர். நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து முதுகலை பட்டபடிப்பு மாணவர்கள் 55 பேர் கலந்துகொண்டு அவர்களது ஆய்வுகளை காட்சிப்படுத்தினர். அவற்றிலிருந்து 3 சிறப்பான ஆய்வுகளை தேர்வு செய்து சான்றிழ்கள் வழங்கப்பட்டது.

மருத்துவம் தொடர்பான கல்வி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மூத்த பேராசிரியர்கள் அவர்களுடைய அனுபவத்தை முதுகலை பட்ட மாணவர்களுக்கு எடுத்து கூறினர். இதில், துணை முதல்வர் ஜமீலா, மயக்கவியல் துறை தலைவர் மாலா, மூத்த பேராசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், இந்திய மருத்துவத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில், 3 சிறந்த முதுகலை பட்டதாரிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : World Anesthesiology Day Celebration ,Stanley Government Hospital , World Anesthesiology Day Celebration at Stanley Government Hospital
× RELATED குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் மீது வழக்குப்பதிவு