×

பாக். இடைத்தேர்தல் இம்ரான் கட்சி வெற்றி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கடந்த ஏப்ரல் மாதம் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, பிடிஐ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அந்த தொகுதிகளுக்கு பல கட்டங்களாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 8 மக்களவை, பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் உள்ள 3 தொகுதிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பிடிஐ கட்சி போட்டியிட்ட 7 மக்களவை தொகுதிகளில் 6 இடங்கள், பஞ்சாப் சட்டப்பேரவை இடைத்தேர்லில் 2 தொகுதிகளை வென்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 2வது இடத்தை பிடித்துள்ளது.

Tags : Imran , Pak. Imran's party wins by-elections
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு