×

சிக்கந்தர் அதிரடியில் ஜிம்பாப்வே வெற்றி

அயர்லாந்து அணியுடன் நடந்த உலக கோப்பை டி20 முதல் சுற்று லீக் ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஹோபர்ட்டில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அயரலாந்து முதலில் பந்துவீச... ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 82 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். வெஸ்லி 22, ஷான் வில்லியம்ஸ் 12, மில்டன் 16, லூக் ஜாங்வி 20* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து தோற்றது. கர்டிஸ் கேம்பர் 27, டாக்ரெல், டெலானி தலா 24 ரன், மெக்கார்தி 22* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் முஸரபானி 3, ரிச்சர்ட், சதாரா தலா 2, வில்லியம்ஸ், சிக்கந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிக்கந்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகள் பெற்றது.


Tags : Zimbabwe , Sikandar action Zimbabwe win
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்