×

தமிழில் பாடிய நஞ்சம்மா

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் இடம்பெற்ற ‘களக்காத்த சந்தன மேரம்’ என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், நஞ்சம்மா (64). இப்படத்தை மறைந்த இயக்குனர் சாச்சி இயக்கி இருந்தார். பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்து கடந்த 2020ல் வெளியான இப்படத்துக்கு 4 தேசிய விருதுகள் கிடைத்தது. ‘களக்காத்த சந்தன மேரம்’ என்ற பாடலைப் பாடிய நஞ்சம்மாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், தமிழ்ப் படம் ஒன்றில் நஞ்சம்மா பாடகியாக அறிமுகமாகிறார். ‘ஆதாம்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய சமர், தற்போது ‘சீன் நம்பர் 62’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதில் ‘என் சேவல்’ என்ற பாடலை வேல்முருகனுடன் இணைந்து நஞ்சம்மா பாடியுள்ளார். இப்பாடலை சிவப்பிரகாசம் எழுதியுள்ளார்.


Tags : Nanjamma sung in Tamil
× RELATED மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்