தொண்டனுக்கு உள்ள உரிமை கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது: மாஜி அமைச்சர் சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்: அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு உள்ள உரிமைக்கூட இனி ஓபிஎஸ்சுக்கு கிடையாது என்று மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்றம் செய்வது குறித்த விவகாரத்தை பேச ஓபிஎஸ்சுக்கு எந்த தகுதியும் இல்லை. சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. தன்னுடைய பதவி ஆசை, சுயலாபத்திற்காக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர் பன்னீர்செல்வம். எம்.ஜி.ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதிமுகவின் சின்னத்தை முடக்கியவர்களை மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: