கணவனை வெட்டி கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை: திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு அருகே நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், மனைவி சிலம்பரசி (30). ஒரு ஆண் குழந்தை உள்ளது. கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே கஞ்சா, மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்ப வறுமை காரணமாக சிலம்பரசி அப்பகுதியிலுள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். கடந்த 2014ல் கண்ணன், மது போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, சிலம்பரசி அருகில் இருந்த அரிவாளை எடுத்து கண்ணனை வெட்டி கொலை செய்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் சிலம்பரசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் விசாரித்து சிலம்பரசிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: