நளினியை தொடர்ந்து விடுதலை செய்ய கோரி முருகன் மனு தாக்கல்

புதுடெல்லி: நளினி, ரவிச்சந்திரனைத் தொடர்ந்து தன்னையும் விடுதலை செய்யக் கோரி முருகன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நன்னடத்தையை அடிப்படையாக் கொண்டு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவித்தது போன்று எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி மற்றும் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என தமிழக அரசும் தனது தரப்பில் பதில் மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நாகரத்தனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நளினி, ரவிச்சந்திரனைத் தொடர்ந்து இவ்வழக்கில் குற்றவாளியாக இருக்கும் முருகனும், தன்னையும் விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: