அதிமுக என்ற கட்சியுடன்தான் பாரதிய ஜனதா கூட்டணி: மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தகவல்

சென்னை: அதிமுக என்ற கட்சியுடன்தான் பாஜ கூட்டணி அமைந்துள்ளதே தவிர, குழுக்களுடன் அல்ல என்று தமிழக பாஜ மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். இதுகுறித்து தமிழக பாஜ மேலிடப் பொறுப்பாளரான சி.டி.ரவி கூறியதாவது: அதிமுக என்ற கட்சியுடன்தான் பாஜ கூட்டணி அமைந்துள்ளதே தவிர, குழுக்களுடன் அல்ல. அதிமுகவுக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதுபற்றி பாஜவுக்கு அக்கறை இல்லை. அதிமுக பல குழுக்களாக பிளவுபட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அதிமுகவின் அனைத்து குழுக்களும் ஒன்று பட்டிருந்தால்தான் அதற்கு கூடுதல் பலம் கிடைக்கும். சசிகலா, டிடிவி.தினகரனுடன் பாஜ பேசுவது பற்றி தெரியாது. அதிமுக தலைமையுடன்தான் பாஜ பேசும். தேர்தல் வரும் போது தான் கூட்டணி அமைப்பதா, இல்லையா என்பதை பாஜ ஆட்சிமன்றக் குழு முடிவு செய்யும். பாஜவை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளோம். வரும் நாட்களில் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேர் தமிழகம் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: