×

விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு; டிஐஜி தலைமையில் 350 போலீசார் குவிப்பு: வேப்பூர் பகுதியில் பரபரப்பு

வேப்பூர்:  கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏ.சித்தூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு 120 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீர்ப்பாயத்தில் முறையிட்டபோது தீர்ப்பாயம் நிலுவை தொகை 22 கோடி ரூபாய் எனவும், இதில் முதல் கட்டமாக 12 கோடி ரூபாய்வழங்கப்படும் எனவும் தெரிவித்ததாம். இதைக்கண்டித்தும், நிலுவை தொகையை முழுமையாக வழங்கக்கோரியும் விவசாயிகள் இன்று வேப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலைவரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

இதையடுத்து இன்று காலை விவசாயிகள் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே திரள தொடங்கினர். இதையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏ.சித்தூர் சர்க்கரை ஆலை, கண்டப்பன்குறிச்சி, வேப்பூர் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே போராட்டத்தை தொடங்கி வைக்க வேப்பூர் வந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை திருச்சியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Tags : DIG ,Veypur , Notice of Farmers' Protest; 350 policemen led by DIG: Confusion in Veypur area
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி