×

சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் ராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டடம்: திறந்து வைத்தார் அமைச்சர் இ.பெரியசாமி

சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் இராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலகக் கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். இன்று (17.10.2022) காலை 11.00 மணியளவில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் இராயபுரம் கிளைக்கு சொந்த அலுவலக கட்டடத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் 198 உறுப்பினர்களுக்கு, 1.99 கோடி அளவிற்கு பல வகையான கடன்கள் வழங்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின், இராயபுரம் கிளைக்கு சொந்த கட்டடம் ரூ.108.00 லட்சம் செலவில் 3928 சதுர அடி பரப்பளவில் ஹகூஆ வசதியுடன் கூடிய சொந்த அலுவலக கட்டப்படும் என வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து தற்போது சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் இராயபுரம் கிளையின் புதிய அலுவலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி 10.07.1930 பதிவு செய்யப்பட்டு, கடந்த 92 ஆண்டுகளாக, சென்னை மாநரில் செயல்பட்டு வருகிறது. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர வகை கூட்டுறவு சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் வங்கியின் இணை உறுப்பினர்களான பொது மக்களுக்கு தேவையான அனைத்து வகை கடன்களையும், இவ்வங்கி வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, அரசால் அறிவிக்கப்படும் நலத்திட்ட கடனுதவிகள் மற்றும் பண்ணைச்சாரா கடன்கள் அனைத்தும் குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக கடன்கள் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் ஆணைப்படி, அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5758 பயனாளிகளுக்கு ரூ.29.09 கோடி  அளவிற்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழு கடன் சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் 293 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.11 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிற்கே முன்மாதிரி நாடாக மாற்ற வேண்டும் என்று அயராது உழைத்து வருகிறார். மாநில அரசு பல்வேறு திட்டங்களை ஆக்கப்பூர்வமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பலதரப்பட்ட திட்டங்களை உருவாக்கு அதனை செயல்படுத்தி வருகிறார். அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், மகளிர் சுயஉதவி குழுக் கடன் போன்றவைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் பெற்றுள்ள உறுப்பினர்களின் ரசீதுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் திரு.கே.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் இரா.மூர்த்தி, சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் திரு.மகேஷ் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் அமலாதாஸ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags : Raipuram ,Central Cooperative Bank of Chennai ,Minister ,E. Periyasamy , Chennai Central Cooperative Bank's Rayapuram branch has its own office building: Minister E. Periyasamy inaugurated
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...