×

பிரிட்டனில் முடிவுக்கு வருகிறது பிரதமர் லிஸ் டிரஸ் ஆட்சி?: செல்வந்தர்களுக்கு அளித்த வரிக் குறைப்பால் நிதி நெருக்கடி

லண்டன் : பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக புதிதாக பதவியேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் லிஸ் அமைச்சரவை தனது பட்ஜெட்டில் வசதி படைத்தவர்களுக்கு வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. பிரதமர் லிஸீன் இந்த நடவடிக்கையால் பிரிட்டன் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கு மாற்று திட்டம் இல்லாததால் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் விலை வீழ்ச்சி அடைந்ததோடு கடன் விகிதங்களும் அதிகரித்து விட்டன.

இதையடுத்து நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நீக்கிய லிஸ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்தார். இந்த நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமான லிஸ் டிரஸை பதவியில் இருந்து நீக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு தரப்பினர் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இந்த வாரத்தில் லிஸ் டிரஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீமானம் கொண்டுவர இருப்பதாகவும் தெரிகிறது. பிரிட்டன் அடுத்த பிரதமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் பொருளாதார நெருக்கடியை சிறப்பாக கையாண்ட நிலையில் தான் தற்போதைய சூழலில் அவரை பிரதமராக்க கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு தரப்பு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சுனக்கிற்கு போட்டியாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட 3 பேரின் பெயர்களை கட்சியின் மற்றொரு பிரிவினர் முன்னிலைப்படுத்த முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுவதால் பிரிட்டன் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.   


Tags : Liz Truss' ,Britain , In Britain, decision, Prime Minister, Lis Truss, government, finance, crisis
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...