×

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்பிபிஎஸ் இடங்களும்  104 பிடிஎஸ் இடங்களும் உள்ளது.  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.

அக்டோபர் 20-ம் தேதி காலையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான 558 இடங்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். அக்.19,20 ஆகிய தேதிகளில் சிறப்பு பிரிவினருக்கான நேர்கானல் நடைபெறும். 30-ம் தேதி மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல் சற்று முடிவில் மருத்துவ படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் நவம்பர் 4-ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். நவம்பர் 15-ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,M.Subramanian , Release of rank list for medical course: Minister M.Subramanian released
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...