இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன் விமானம்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்..!!

அம்ரித்சர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சர்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய டிரோன் விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. ரணியா எல்லை சாவடியில் பணியில் இருந்த பாதுகாப்புப்படையினர், நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து டிரோன் ஒன்று இந்தியாவிற்குள் ஊடுருவியதை கண்டு அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிகுண்டுகள் தாக்கியதில் பாகிஸ்தான் டிரோன் பழுதாகி இந்திய எல்லைக்குள் விழுந்தது.

இதையடுத்து டிரோனை கைப்பற்றி சோதித்த அதிகாரிகள், அதில் கருப்பு துணி பை ஒன்றில் மர்ம பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்டது போதைப்பொருளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள எல்லை கிராமங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரணியா எல்லை சாவடியிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடந்த 3 நாட்களில் வீழ்த்தப்படும் 2வது பாகிஸ்தான் டிரோன் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: