×

ஐப்பசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: மேல்சாந்தி நாளை தேர்வு

திருவனந்தபுரம்,: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.  18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி  அளிக்கப்படும்.

அடுத்த மண்டல காலம் முதல் ஒரு வருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்ச்சி,  நாளை  நடைபெறுகிறது.  சபரிமலை மூலவர் கோயிலுக்குரிய மேல் சாந்தியையும்,  பவுர்ணமி வர்மா மாளிகை புரம் தேவி கோயிலுக்கான  மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். பின்னர், மன்னர் சித்திரை திருநாள் பிறந்தநாளை முன்னிட்டு 24ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி 5 மணிக்கு நடை திறக்கும் என்றும்  தேவசம்போர்டு  தெரிவித்துள்ளது.


Tags : Aippasi Month Pooja Sabarimala Temple Walk Opening ,Melshanti , Aippasi Month Pooja Sabarimala Temple Walk Opening Today: Melshanti Selection Tomorrow
× RELATED மோடி கேரண்டி என்பது வெறும் பேச்சோடு...